அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே , வணக்கம் ! நாளை (14-01-2022 வெள்ளிக்கிழமை ) முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது . மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 19-01-2022 (புதன்கிழமை ) முதல் நடைபெறும் . இரண்டாம் பருவ கல்வி கட்டண பாக்கி தொகை வைத்துள்ளவர்கள் 19-01-2022 புதன்கிழமை க்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் . அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .
'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது? குழந்தைகளுக்கு பாடங்களைப் பல விதங்களில் சொல்லித் தர முடியும். அதைச் சுவாரஸ்யமாக்கினால் புரிந்து கொள்வது எளிதாகும். இப்படிச் செய்ய ஒரு விதம், 'ரெஸிப்ரோகல் லர்னிங்’ (Reciprocal Learning) என்ற முறையாகும். இந்த முறையை உபயோகிப்படுத்துகையில் பாடத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் படிக்கும் திறன் மேம்படும். இதைப் பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. படிக்கத் திணறும் மாணவர்களுக்கும், பாடத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட, பாடத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவிய முறைகளைப் பற்றி பல தகவல்கள் உள்ளன. குறிப்பாக, வகுப்பில் ஒரு இடத்தில் உட்கார முடியாமல் கவனம் இங்கும் அங்கும் சிதறி அலைந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, வகுப்புகளில் அவர்களின் முழுக் கவனம் கூடிய பங்கேற்பும், பாடத்தைப் புரிந்து கொள்ள மேம்படுத்துவதிலும் அத்தகைய முறைகள் உதவும். ‘ரெஸிப்ரோகல் லர்னிங்’ என்ற இந்த முறையை ஆசிரியர் ஒருவர் கற்றுத் தர, மாணவர்கள் தானாகவே கற்றுக் கொள்ளுவதற்கு உதவும் ஒரு முறையாகும். இது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம். ரெஸிப்ரோகல...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம்! 27-01-2022(வியாழக்கிழமை) அன்று குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஆன்லைன் வகுப்பில் கொண்டாடப்பட உள்ளது. LKG முதல் 4ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆன்லைன் மூலம் 27-01-2022(வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி அளவிலும் 5 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 11.30 மணி அளவிலும் நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 24-01-2022(திங்கட்கிழமை) அன்றுக்குள் வகுப்பு ஆசிரியரிடம் ஆன்லைன் வகுப்பில் தெரிவிக்கவும். கட்டுரை போட்டி: 5 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் "இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு(Role of Tamil Nadu in Freedom Struggle)" என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 3 பக்கத்திற்கு மிகாமல் கட்டுரையாக A4 தாளில் 26-01-2022(புதன்கிழமை) அன்று பெற்றோர் ஆசிரியர் கழக சந்திப்பின் போது பள்ளியில் சமர்ப்பிக்கவும். ஓவிய போட்டி: LKG முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இயற்கை சம்பந்தமான மாணவர்களின் சொந்த படைப்பை A4 தாளில் 26-01-2022(புதன்க...
Comments
Post a Comment