ஆன்லைன் மூலம் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழா!

 அன்பார்ந்த மாணவ,மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வணக்கம்!  இன்று(02-10-2020) ஆன்லைன் மூலம் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் 80க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆசிரியைகள், சிறப்பு விருந்தினர், பங்கேற்ற மாணவர்கள் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தி பங்கேற்க வைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நமது பள்ளியில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதற்கான செயல் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பள்ளிகள் செயல்பட முடியாத சூழல் உள்ளது. ஆகையால் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 19-10-2020(திங்கட்கிழமை) முதல் காலாண்டு தேர்வுகள் நடைபெறும். எழுத்து தேர்வுக்கு 50 மதிப்பெண்களும், வாய்மொழி தேர்வுக்கு 50 மதிப்பெண்களும் அனைத்து பாடங்களுக்கும் வழங்கப்படும்.(UKG முதல் 10ம் வகுப்பு வரை).

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...