வாய்மொழித் தேர்விற்க்கான மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறை!
அன்பார்ந்த மாணவ மாணவிகளே,
வணக்கம்! காலாண்டுத் தேர்வில் கொடுக்கப்படும் 100 மதிப்பெண்களில் 50 மதிப்பெண்கள் எழுத்து தேர்விற்கும் 50 மதிப்பெண்கள் வாய்மொழித் தேர்விற்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
வாய்மொழித் தேர்விற்க்கான மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறை:
நாளை(06-10-2020) முதல் தினமும் GOOGLE MEET மூலம் 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் மாணவர்களிடம் கேட்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் இந்த முறையில் 30 மதிப்பெண்கள் கணக்கிடப்படும். மீதமுள்ள 20 மதிப்பெண்களுக்கு இன்று(05-10-2020) முதல் பாட ஆசிரியர்களுக்கு TELEGRAM குரூப் மூலம் தினமும் கொடுக்கப்படும் வீட்டுப்படங்களை அனுப்புவதன் மூலம் கணக்கிடப்படும். ஒரு பாடத்திற்க்கு ஒவ்வொரு முறையும் விடைகளை அனுப்புவதற்கு 5 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். வீட்டுப்பாடங்களை அனுப்புவதற்கான நேரம் இரவு 08 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.GOOGLE MEET மூலம் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவிக்கவும்.
பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்:
5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் 12-10-2020 (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
UKG முதல் 4ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் 13-10-2020 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை புரிவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியுடன் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி சம்பந்தமான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
OK sir when did you give exam papers sir❓❓
ReplyDelete