நமது பள்ளி திறப்பது தொடர்பாக ...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! வருகின்ற 16-11-2020 முதல் பள்ளிகள் திறக்க(9 மற்றும் 10ம் வகுப்புக்கு) அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகையால் இணைக்கப்பட்ட பட்டியலில் உள்ள நாட்களில் பள்ளி வேலை நாளாகவும், மீதமுள்ள வார நாட்களில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறும். பள்ளி நாட்களில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களும் சமூக அறிவியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்கள் ஆன்லைன் மூலம் நடைபெறும். ஜனவரி மாதம் முதல் அனைத்து வேலைநாட்களிலும் பள்ளி செயல்படும். பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக பெற்றோர்களிடம் வருகின்ற 06-11-2020 (வெள்ளிக்கிழமை) GOOGLE MEET மூலம் காலை 10 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும். மேலும் 09-11-2020 (திங்கட்கிழமை) அன்று பெற்றோர்கள் காலை 10 மணி அளவில் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது சம்பந்தமாக விருப்ப கடிதத்தை பூர்த்திசெய்து தருமாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Comments
Post a Comment