UKG மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டாம் இடைப் பருவ தேர்வு எழுதும் முறை...

 அன்பார்ந்த மாணவ,மாணவிகளே,

                வருகின்ற (23-11-2020)திங்கட்கிழமை முதல் இரண்டாம் இடைப் பருவ தேர்வுகள் நடைபெற உள்ளது. அதுசமயம் UKG மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு  மாலை 4 மணி முதல் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் 50 மதிப்பெண்களுக்கு மாலை 04.00 மணி முதல் 05.40 மணி வரை நடைபெறும். வினாத்தாட்கள் அனைத்தும் TELEGRAM குரூப்புக்கு மாலை 4 மணிக்கு அனுப்பப்படும். மாலை 4 மணிக்கு வினாத்தாள் சம்பந்தமான சந்தேகங்கள் Google Meet மூலம் பாட ஆசிரியர்களிடம் கேட்கலாம்.தேர்வு எழுதிய விடைத்தாட்களை மாலை 6.30 மணிக்குள் போட்டோ எடுத்து PDF வடிவில் ஆசிரியர்களுக்கு அனுப்பவும்.மேலும் தினமும் காலை தேர்வுக்கான திருப்புதல் வீடியோ அனுப்பப்படும். காலை 10.00 மணிக்கு GOOGLE MEET LINK மூலம் தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் ஆசிரியர்கள் மூலம் நடைபெறும்.  அனைத்து விடைத்தாட்களையும் 30-11-2020(திங்கட்கிழமை) அன்று பள்ளியில் பெற்றோர்கள் மூலம் நேரடியாக சமர்ப்பிக்கவும்.

UKG முதல் 4 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் (23-11-2020)திங்கட்கிழமை அன்று மதியம் அனைத்து தேர்வுக்கான வினாத்தாட்களையும்  பள்ளியில் பெற்று செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பெற்றோர்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் நாளைக்குள் தெரிவிக்கவும்.


 

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...