கற்றல் திறன் ஆய்வு (19-07-2021 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை)...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! 19-07-2021 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே மாணவர்கள் பெற்றோர்களுடன் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் அனைத்து பாட நோட்டுகள் மற்றும் புத்தகங்களையும் பள்ளிக்கு எடுத்து வரவும்.
வகுப்பு ஆசிரியர்களால் ஆய்வின் போது கீழ்கண்ட தகவல்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
1. மாணவர்களின் வாசிப்புத் திறன், எழுதும் திறன்.
2. பாட நோட்டுகள் மற்றும் புத்தகங்கள் பராமரித்தல்.
மேலும் 2 வரி(2 LINES) , 4 வரி(4 LINES) நோட்டுகள் மற்றும் வீட்டு பாடங்கள் ஆகியவற்றின் கடந்த வாரம் எழுதிய பக்கங்கள் திருத்தி தரப்படும்.
19-07-2021 திங்கட்கிழமை அன்று மட்டும் ஆன்லைன் வகுப்புகள் கீழ்கண்ட நேரங்களில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
1 முதல் 4ஆம் வகுப்பு வரை
மதியம் 2 மணி
5ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை
மதியம் 2 மணி மற்றும் 3 மணி
-
Comments
Post a Comment