புத்தாக்க பயிற்சி(INNOVATIVE TRAINING)

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வணக்கம்! 05-07-2021(திங்கட்கிழமை) முதல் 09-07-2021(வெள்ளிக்கிழமை) வரை மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி(INNOVATIVE TRAINING) ஆன்லைன் வகுப்பில் வழங்கப்பட உள்ளது. எனவே மாணவர்கள் தவறாது ஆன்லைன் வகுப்பில் அனைத்து நாட்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயிற்சி வகுப்பில் மாணவர்களின் வாசித்தல்(READING), எழுதுதல்(WRITING), பேச்சு போட்டி(SPEECH) ஆகியவற்றிற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.


பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
08-07-2021(வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்பு ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி சம்பந்தமான ஆலோசனைகளை பெறலாம்.


ஓவியப்போட்டி (DRAWINGCOMPETITION)
1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இயற்கை சம்பந்தமான ஓவியங்கள் A4 தாளில் வரைந்து பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெறும் 08-07-2021(வியாழக்கிழமை) அன்று நேரடியாக ஒப்படைக்கவும். ஓவியங்கள் அனைத்தும் மாணவர்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும். சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
 

கட்டுரைப்போட்டி (ESSAY WRITING COMPETITION)
6 முதல் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேச தலைவர்கள் சம்பந்தமான கட்டுரை  A4 தாளில் எழுதி  பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெறும் 08-07-2021(வியாழக்கிழமை) அன்று நேரடியாக ஒப்படைக்கவும். கட்டுரைகள் அனைத்தும் மாணவர்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும்.கட்டுரை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். சிறந்த கட்டுரைக்கு பரிசுகள் வழங்கப்படும்.
 

பேச்சுப்போட்டி (SPEECH COMPETITION)
1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆன்லைன் மூலம் 09-07-2021(வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் நடைபெறும். பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 07-07-2021(புதன்கிழமை) அன்றுக்குள் வகுப்பு ஆசிரியரிடம் ஆன்லைன் வகுப்பில் தெரிவிக்கவும்.சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
 

மாணவர்கள் மேற்கண்ட அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளுமாறு பள்ளியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

Comments

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...