மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்!!!
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! 01-09-2021(புதன்கிழமை) அன்று முதல் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
· 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும்.
· வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள்
· காலை 9 மணி முதல் மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
· காலை, மாலை இடைவேளைகள் மற்றும் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் ஒன்று கூடுவது முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்களிடையே உணவு பரிமாற்றம் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும்.
· மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும்.
· மாணவர்கள் 3 முகக்கவசங்கள் கொண்டு வரவேண்டும். முதல் முகக்கவசத்தை பள்ளிக்குள் நுழைந்தவுடன் மாற்றி இரண்டாம் முகக்கவசத்தை அணிய வேண்டும். மதிய உணவு இடைவெளிக்குப் பின் மூன்றாவது முகக்கவசத்தை அணிய வேண்டும்.
· காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது.
· மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி ( Sanitizer ) சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும்.
· சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
· சமூக இடைவெளியினை கடைபிடித்து வகுப்பறையில் அமர வேண்டும். தங்களது இருக்கைகளை மாற்றக்கூடாது.
· மாணவர்கள் சிறிய அளவிலான சோப்பு கொண்டு வர வேண்டும். இடைவெளியின் போது சோப்பு கொண்டு அடிக்கடி கை கழுவ வேண்டும்.
· மற்றவர்களின் பொருட்கள்(பேனா,பென்சில், புத்தகம்) போன்ற பொருட்களை பயன்படுத்த கூடாது.
· தலைமுடி, கை மற்றும் கால் நகங்கள் சரியான முறையில் வெட்டப்பட்டிருக்க வேண்டும்.
· ஊதா நிற சீருடை அணிந்து இருக்க வேண்டும்.
· மாணவர்கள் மற்ற மாணவர்களை BROTHER அல்லது SISTER என்று அழைக்க வேண்டும்.
· பெற்றோர்களின் விருப்ப கடிதத்தை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.
·
· முதல் இடைப் பருவ தேர்வு விடைத்தாள்களை 01-09-2021(புதன்கிழமை) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும்.
Comments
Post a Comment