Posts

Showing posts from September, 2021

காந்தி ஜெயந்தி விடுமுறை!!!

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,      வணக்கம்! காந்தி ஜெயந்தி முன்னிட்டு 02-10-2021(சனிக்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 04-10-2021(திங்கட்கிழமை) அன்று நடைபெறும்.      5 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது வீட்டு பாடங்களை வரும் 04-10-2021(திங்கட்கிழமை) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும். 5 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் 04-10-2021(திங்கட்கிழமை) அன்று காலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 04-10-2021(திங்கட்கிழமை) அன்று மதியம் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல செயல்படும்.

பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் (18-09-2021 சனிக்கிழமை)

அன்பார்ந்த மாணவ /மாணவிகளே, வணக்கம்!  18-09-2021(சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் LKG முதல் 8ஆம் வகுப்பு வரை பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ளவும். கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை புரிவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியுடன் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி சம்பந்தமான விபரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் LKG முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 20-09-2021 திங்கட்கிழமை முதல் மாதாந்திர தேர்வு துவங்க உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை!!!

  அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே ,      வணக்கம் ! விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 10-09-2021(வெள்ளிக்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது .  மாணவர்கள் தங்களது வீட்டு பாடங்களை வரும் 11-09-2021( சனிக்கிழமை ) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும் . மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 13-09-2021(திங்கட்கிழமை) அன்று நடைபெறும் .  

ஆசிரியர் தின விழா

  அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே , வணக்கம் ! 05-09-2021( ஞாயிற்றுக்கிழமை ) அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட உள்ளது . எனவே 04-09-2021( சனிக்கிழமை ) அன்று நமது பள்ளியில்   ஆசிரியர் தின நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் . LKG முதல் 4 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆன்லைன் மூலம் 04-09-2021( சனிக்கிழமை ) அன்று காலை 10 மணி அளவிலும் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 11.30 மணி அளவிலும் நடைபெற உள்ளது . பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 02-09-2021( வியாழக்கிழமை ) அன்றுக்குள் வகுப்பு ஆசிரியரிடம் ஆன்லைன் வகுப்பில் தெரிவிக்கவும் .