பள்ளி திறப்பு(01-02-2022)...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்!
1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் 01-02-2022(செவ்வாய் கிழமை) முதல் பள்ளி செயல்படும். 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.
B பிரிவு மாணவர்கள் மட்டும் 01-02-2022(செவ்வாய்க்கிழமை) அன்று பள்ளிக்கு வரவும். A பிரிவு மாணவர்கள் 02-02-2022(புதன்கிழமை) அன்று பள்ளிக்கு வரவும். கல்வி கட்டண பாக்கி தொகையை வரும் 04-02-2022( வெள்ளிக்கிழமை) தேதிக்குள் செலுத்தி தங்களது மேலான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என பள்ளியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்
A பிரிவு மாணவர்களுக்கு திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பள்ளி செயல்படும்.
B பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் பள்ளி செயல்படும். பள்ளி வாகனம் வழக்கம்போல் செயல்படும்.
மாணவர்கள் கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
· காலை, மாலை இடைவேளைகள் மற்றும் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் ஒன்று கூடுவது முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்களிடையே உணவு பரிமாற்றம் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும்.
· மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும்.
· மாணவர்கள் 3 முகக்கவசங்கள் கொண்டு வரவேண்டும். முதல் முகக்கவசத்தை பள்ளிக்குள் நுழைந்தவுடன் மாற்றி இரண்டாம் முகக்கவசத்தை அணிய வேண்டும். மதிய உணவு இடைவெளிக்குப் பின் மூன்றாவது முகக்கவசத்தை அணிய வேண்டும்.
· காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது.
· மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி ( Sanitizer ) சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும்.
· சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
· சமூக இடைவெளியினை கடைபிடித்து வகுப்பறையில் அமர வேண்டும். தங்களது இருக்கைகளை மாற்றக்கூடாது.
· மாணவர்கள் சிறிய அளவிலான சோப்பு கொண்டு வர வேண்டும். இடைவெளியின் போது சோப்பு கொண்டு அடிக்கடி கை கழுவ வேண்டும்.
· மற்றவர்களின் பொருட்கள்(பேனா,பென்சில், புத்தகம்) போன்ற பொருட்களை பயன்படுத்த கூடாது.
· தலைமுடி, கை மற்றும் கால் நகங்கள் சரியான முறையில் வெட்டப்பட்டிருக்க வேண்டும்.
· ஊதா நிற சீருடை அணிந்து இருக்க வேண்டும்.
· மாணவர்கள் மற்ற மாணவர்களை BROTHER அல்லது
SISTER என்று அழைக்க வேண்டும்.
SCHOOL PH:9176367298
Comments
Post a Comment