73-வது குடியரசு தின விழா...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம்! 27-01-2022(வியாழக்கிழமை) அன்று குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஆன்லைன் வகுப்பில் கொண்டாடப்பட உள்ளது. LKG முதல் 4ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆன்லைன் மூலம் 27-01-2022(வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி அளவிலும் 5 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 11.30 மணி அளவிலும் நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 24-01-2022(திங்கட்கிழமை) அன்றுக்குள் வகுப்பு ஆசிரியரிடம் ஆன்லைன் வகுப்பில் தெரிவிக்கவும். கட்டுரை போட்டி: 5 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் "இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு(Role of Tamil Nadu in Freedom Struggle)" என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 3 பக்கத்திற்கு மிகாமல் கட்டுரையாக A4 தாளில் 26-01-2022(புதன்கிழமை) அன்று பெற்றோர் ஆசிரியர் கழக சந்திப்பின் போது பள்ளியில் சமர்ப்பிக்கவும். ஓவிய போட்டி: LKG முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இயற்கை சம்பந்தமான மாணவர்களின் சொந்த படைப்பை A4 தாளில் 26-01-2022(புதன்க...