இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை மாதத்தவணையாக 02-11-2020 தேதிக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்
அன்பார்ந்த பெற்றோர்களே , 02-11-2020 திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவங்குகின்றன . இந்த கொரோனா பாதிப்பால் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது . ஆகையால் ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்த நமது பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . எனவே பெற்றோர்கள் வருகின்ற ஆன்லைன் வகுப்புகளில் தங்கள் குழந்தைகள் தொடர்ந்து பயன்பெற, இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை மாதத்தவணையாக 02-11-2020 தேதிக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் .