மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்!!!
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம்! 01-09-2021(புதன்கிழமை) அன்று முதல் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. · 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும். · வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள் · காலை 9 மணி முதல் மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடைபெறும். · காலை, மாலை இடைவேளைகள் மற்றும் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் ஒன்று கூடுவது முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்களிடையே உணவு பரிமாற்றம் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். · மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும். · ...